இணையத்தளங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் பேஸ்புக் முதலிடத்தை பிடித்துள்ளது.
இணையதளங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அலெக்சா நிறுவனத்தின்
தரவரிசையில் கூகுளை இரண்டாம் இடத்திற்கு தள்ளியதன் மூலம் பேஸ்புக் முதல்
இடத்தை பிடித்துள்ளது.அதிகம் பேரால் பார்க்கப்படும் சிறந்த இணையதளங்களின் தரவரிசையை அலெக்சா நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த தரவரிசையில் இதுவரையில் தேடல் தளமான கூகுள் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் உலகமெங்கும் 90 கோடிக்கும் அதிகமான பாவனையாளர்களை பெற்றுள்ள பேஸ்புக் தளம் தற்போது கூகுளை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த அலெக்சா தரவரிசையில் பேஸ்புக்,கூகுள்,யூ ட்யூப், யாஹூ,பைடு ஆகிய இணையதளங்கள் முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

0 comments:
Post a Comment