ஆல் இன் ஆல் அழகுராஜா கம்பியூட்டர்!!!

ஏஸர் நிறுவனம் கம்பியூட்டர் மற்றும் லேப்டாப்களில் பல புதுமைகளை படைத்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் சாதனங்கள் மக்களிடையே பிரபலம் அடைந்து வருவதற்க்கு இதுவும் ஒரு காரணம். ஏஸர் நிறுவனம் அனைத்து சிறப்பம்சங்களை கொண்ட கம்பியூட்டரை வெளியிட வேண்டும் எண்ணத்தில் இருந்தது. IFA பெர்லின் 2013 தொழில்நுட்ப கண்காட்சி இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ளது அதற்க்கு முன்பே ஏஸர் நிறுவனம் தனது புதுமையான ஏஸர் ஆஸ்பையர் யு5-610 ஆல்-இன்-ஒன் (Acer Aspire U5-610 all-in-one) கம்பியூட்டர் வெளியீட்டை அறிவித்துள்ளது. 23இன்ஞ் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்ட இந்த விண்டோஸ் 8 கம்பியூட்டரில் லேட்டஸ்டான இன்டல் பிராசஸர் உள்ளது. 16ஜிபி வரை ராமை இதில் நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் இதில் நிவிடியா ஜீ போர்ஸ் ஜிடிஎக்ஸ் 760எம் (GeForce GTX 760M) கிராபிக்ஸ் உள்ளது. இதில் இருக்கும் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ஏஸர் ரிமோட் டெக்னாலஜிதான். இந்த விண்டோஸ் 8 கம்பியூட்டரில் புளுடூத் அல்லது wi-fi மூலம் ஆப்பிள் அல்லது ஆன்டிராய்ட் போன்களை இணைத்து ரிமோட்டாக பயன்படுத்தலாம். ஏஸர் ஆஸ்பையர் யு5-610 ஆல்-இன்-ஒன் கம்பியூட்டர் டச் சென்ஸிடிவ் கொண்டது. இதில் ஒயர்லெஸ் கீபோர்ட் மற்றும் மவுஸ் உள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை பார்ப்போம்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ஆல் இன் ஆல் அழகுராஜா கம்பியூட்டர்!!! - Smart planet