தோட்டம் உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் in tamil

தோட்டம் வடிவமைப்பது ஒரு கலை தான். பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் தோட்டம் உருவாக்குவது எப்படி என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
நிலம் வாங்கியாச்சு, நல்லநீர் இருக்கிறது ஒரு தோட்டம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நம்மவர்களுக்கு தோட்டம் எப்படி வடிவமைக்கலாம் என்று உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Start Creating Plan என்பதை சொடுக்கி எளிதாக தோட்டம் உருவாக்க ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையின் இடது பக்கத்தில் மரங்கள், பூச்செடிகள் என தோட்டம் வைக்கத் தேவைப்படும் அனைத்தும் இருக்கும் இதில் நமக்கு எந்த இடத்தில் என்ன செடி வைக்கலாம் என்று பார்த்து வைக்கலாம்.
ஒவ்வொன்றின் நீள அகலங்களையும் நம் விருப்படி மாற்றி அமைக்கலாம், எல்லாம் வடிவமைத்து முடித்த பின் அப்படியே அதை பிரிண்ட் செய்து வைத்துக்கொண்டு எளிதாக தோட்டம் உருவாக்கலாம்.
புதுமை விரும்பிகளுக்கும் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் எப்படி தோட்டமாக மாற்றலாம் என்று எண்ணும் அனைவருக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தோட்டம் உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் in tamil - Smart planet