தளத்தை வடிவமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :
டெம்ப்ளேட் தேர்வு செய்தல்:
பிளாக்கர் வலைப்பூக்களுக்கு ஆயிரமாயிரம் இலவச டெம்ப்ளேட்கள் உள்ளன. ஆனால் டெம்ப்ளேட்டை தேர்வு செய்யும் பொழுது பின்புறத்தில் புகைப்படம் ஏதும் இல்லாமல் முற்றிலும் வெண்மை நிற டெம்ப்ளேட்கள் தேர்வு செய்வது நல்லது. பெரும்பாலான வாசகர்களும் வெண்மை நிறத்தையே விரும்புகின்றனர். வெண்மை நிறத்தை தேர்வு செய்வதால் வாசகர்களுக்கு எழுத்துக்கள் படிப்பதில் உள்ள சிரமங்களை(கண்கள் கூசுவது) தவிர்க்கலாம். மற்றும் வலைப்பூவும் வேகமாக திறக்க இந்த வகை டெம்ப்ளேட்கள் உதவுகின்றன. டெம்ப்ளேட் அழகை பார்க்காமல் பல்வேறு வசதிகள் உள்ளதா என்பதை மட்டும் பார்த்து டெம்ப்ளேட் தேர்வு செய்யவேண்டும்.
பதிவுலகில் நான், பொன்மலர், பலே பிரபு, வைரை சதீஷ் போன்ற மேலும் பல நண்பர்களும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவு எழுதுகின்றனர். நாங்கள் படித்ததையோ அல்லது தெரிந்ததையோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரே விட்ஜெட்டை பலரும் வெவ்வேறு வடிவங்களில் பதிவாக போடுவோம். ஆனால் உங்கள் வலைப்பூவிற்கு எந்த விட்ஜெட் பொருத்தமாக இருக்கும், எந்த விட்ஜெட் இணைத்தால் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உறுதி செய்து அதில் உங்களுக்கு தேவையான ஒரு விட்ஜெட்டை மட்டும் வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.
அனைத்து விட்ஜெட்டுக்களையும் உங்கள் வலைப்பூவில் சேர்த்தால் உங்கள் பிளாக் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதால் பிளாக் வரும் வாசகர்கள் கடுப்பாகி திரும்பி சென்று விடுவார்கள். முடிந்த அளவு பிளாக்கர் தளத்தின் Default விட்ஜெட்டுக்களை மட்டுமே வைத்து கொள்வது நல்லது. அவசியமில்லாமல் மூன்றாம் தள விட்ஜெட்டுக்களை சேர்க்க வேண்டாம்.
ஒரு சிலர் தங்கள் பிளாக் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை வலைப்பூவில் இணைத்து கொள்வார்கள். உதாரணமாக ஒன்றுக்கும் அதிகமான Visitor Counters, பனி கொட்டுவது போன்று, மவுஸ் முனையை மாற்றுவது. உண்மையை சொல்லப்போனால் இந்த விட்ஜெட்டுக்களால் 1% நன்மை கூட உங்கள் வலைப்பூவிற்கு இல்லை. உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். மாறாக ஒரு சிலருக்கு இவைகள் வெறுப்பாக தான் சென்று முடியும்.
அதற்க்காக அழகாகவே இருக்க கூடாதான்னு கேட்கிறீங்களா? அழகாக இருக்க கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே. 95% வாசகர்களுக்கும் 5% அழகுக்கும் முக்கியத்துவம் கொடுங்கன்னு தான் சொல்றேன்.
பிளாக்கில் இருக்க வேண்டிய முக்கியமான விட்ஜெட்டுகள் என்ன:
குறிப்பிட்ட சில விட்ஜெட்டுக்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அவை என்னனென விட்ஜெட்டுகள் என்பதை கீழே பாருங்கள்.
1. Popular Post Widget
2. Email subscription Widget
3. Social Networking Sites Widget
4. Follower Widget
5. Blog Archive Widget
6. Search Box Widget
இந்த 6 விட்ஜெட்டுகள் கண்டிப்பாக உங்கள் பிளாக்கில் இருக்க வேண்டும். மற்றும் இதனோடு இந்த விட்ஜெட்டை சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கும் மற்ற விட்ஜெட்டுகளையும் வைத்து கொள்ளுங்கள்.
இந்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள சமூக தளங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment