Android in pc(ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..)

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..

மென்பொருளின் பெயர் : Blue Stacks
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்பயூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்த பயன்படுகிறது இந்த மொன்பொருள். இந்த மென்பொருள் windows, mac இயங்குதளங்களில் இயங்கக்கூடிய கட்டமைப்பை பெற்றுள்ளது. 
இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் வைத்துக்கொண்டால், ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸ், மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். 

உதராணமாக ஆண்ட்ராய்ட் போன்களில் எத்தனையோ புத்தம் புதிய கேம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் இயங்கூடிய சாதனங்களில் அவற்றை விளையாடி மகிழ்வோம். அந்த கேம்களையே கம்ப்யூட்டரில் விளையாட நினைப்போம். அவ்வாறு விளைவாடுவதற்கு நேரடியாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாது.


கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நிறுவம் பயன்படும் ஒரு முக்கியமான மென்பொருள்தான் இந்த Blue Stacks. இந்த மென்பொருளைப் போல வேறு சில மென்பொருள்களும் இருக்கின்றன. என்றாலும் இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானதும், இலவசமானதுமாகும்..
bluestacks-software-to-use-android-apk-in-windows-mac-pc-laptop
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:download bluestacks for mac and windows pc

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி? 

  • முதலில் புளூஸ்டாக் மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.
  • தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவ, புளூஸ்டாக் மென்பொருளைத் திறந்து அதில் உள்ள search box -ல் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரைக் கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்.
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சரியான பெயரை கொடுத்து தேடினால் அந்த அப்ளிகேஷன் புளூஸ்டாக் மென்பொருளில் காட்டும். காட்டுகிற அந்த ஆண்ட்ராய் அப்ளிகேஷன் மீது கிளிக் செய்தால் தானாகவே அந்த அப்ளிகேஷன் ரன் ஆகத்தொடங்கிவிடும். 
  • அல்லது நீங்கள் தரவிறக்கம் செய்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மீது ரைட் கிளிக் செய்து ஓப்பன் வித் ப்ளூஸ்டாக் என்பதைத் தேர்ந்தெடுக்க அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Android in pc(ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..) - Smart planet