SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!





                                      Samsung நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதாவது சாம்சங் ஒரு தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம். இதில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன, டேப்லெட் கணினிகளும் கிடைக்கின்றன. இவ்வளவு தான் தெரியுமா? போங்க பாஸ் இதெல்லாம் ரொம்ப பழசு...!
சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய அன்மைத்தகவல்களை உங்களுக்காகவே இங்கே வழங்கியுள்ளோம். பெரும்பாலானோருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ சாம்சங் பற்றிய விரிவான மற்றும் அறிய 11 தகவல்கள்...

  1. சாம்சங் ஆரம்பிக்கப்பட்டது 1938ல். தற்பொழுது சாம்சங் குரூப் செய்யும் வியாபாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 80ற்க்கும்  மேல்
  2. சாம்சங் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு தான் உலகின் உயரமானகட்டிடமான துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீஃபாவை கட்டியது.
  3. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டும் உலகம் முழுவதும் 370,000பணியாளர்கள் உள்ளனர்.
  4. 2011ல் சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் கொடுத்த சம்பளத்தின் அளவு 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்!!
  5. சாம்சங் நிறுவனம், கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் பங்களித்திருக்கிறது.
  6. கடந்தவருடம் சாம்சங் சாதனங்களை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2000 கோடிகளை செலவழித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூ.2,500 கோடிகள்!! [கோடிகள் தோராயமாகவே இருக்கும்.
  7. 2011 ஆம் ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் ரூ.1247000 கோடிகள். இதில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருமானம் மட்டுமே 9 லட்சம் கோடிகள் என்கிறது சாம்சங்கின் அறிக்கை.
  8. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் சென்ற காலாண்டின் நிகர லாபம் மட்டுமே 827 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,600 கோடிகள். இதே சமயம் கூகுளின் மொத்தவருமானமே 340 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே!
  9. கடந்தவருடம் மட்டும் சாம்சங் விற்பனை செய்த செல்போன்களின் எண்ணிக்கை 215.8 மில்லியன்.
  10. சாம்சங் இணையதளத்தில் செல்போன்களுக்கான பிரிவில் மொத்தம் 145 போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் 3 போன்களை 2 வேறு வண்ணங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளது.[தளத்தில்]
  11. டிவி விற்பனையில் கடந்த 6 ஆண்டுகளாக சாம்சங் டிவிக்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்திலேயே உள்ளது.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை! - Smart planet