how to solve laptop typing problem (keyboard layout)


உங்கள் laptop keyboard மேலே உள்ள நம்பர்களில்  2 என்ற button சேர்ந்துள்ள @ என்ற 
 button அழுத்தி @ என்ற குறியீடை நீங்கள் டைப் செய்யும்பொழுது அந்த @ க்கு பதிலாக L  button அருகிள் உள்ள என்ற குறியீடு வருகிறதா ? இதை சரி செய்வது எப்படி ?

1) முதலில் Start > Control Panel செல்லுங்கள்


2) அடுத்து Large Icon செலெக்ட் செய்து Region and Language என்பதை கிளிக்  செய்யுங்கள்

3) இதில் Format ல் United Kingdom என்று இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.


4) இதனை ஓப்பன் செய்து United State என்பதை செலெக்ட் செய்யுங்கள்.



5) மாற்றிய பிறகு Apply பட்டனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.


6) அடுத்ததாக Keyboard and Language என்ற ஆப்சனில் உள்ள Change Keyboards என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். 


7)  இந்த ஆப்சனிலும் United Kingdom என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்


8) இதில் Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.


9) இதில் United State என்று குறிப்பிட்ட இடத்தில் உள்ள United State International & US என்ற இரண்டு இடத்தையும் டிக் செய்து ok செய்து கொள்ளுங்கள்.




10) உடனே United State Option இதுபோல் வந்துவிடும். இதனை மவுசால் செலெக்ட் செய்துகொண்டு அருகில் உள்ள Move Up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.



11)  இப்பொழுது மேலே Default Input Language என்ற இடத்தில் உள்ள United Kingdom என்று இருந்த இடத்தை ஓப்பன் செய்து  English (United State) - US என மாற்றிக்கொண்டு Apply செய்து ok பட்டனை கிளிக் செய்து இந்த தட்டை மூடிவிடுங்கள். Region and Language என்ற தட்டையும் ok செய்து மூடி விடுங்கள்.




12) இனி மறுபடியும் Region and Language Settings ஐ ஓப்பன் செய்து Change Keyboard Language என்ற ஆப்சனை திறந்துகொள்ளுங்கள். இப்பொழுது இந்த தட்டில் Default Input Language English (United State) US என்று வந்திருக்கும்.

சரி இனி கீழே உள்ள United Kingdom என்ற இடத்தை கிளிக் செய்து Remove என்ற பட்டனை அழுத்தி இந்த United Kingdom என்ற ஆப்சனை எடுத்துவிடுங்கள்.


13) இனி ok பட்டனை அழுத்தி இந்த தட்டையும் மூடிவிடுங்கள்.




இப்பொழுது நீங்கள் டைப் செய்து பாருங்கள்
உங்கள் கீபோர்டில் @ என்ற பட்டனை அழுத்தும்பொழுது சரியாக @ என்று டைப் ஆகும்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

how to solve laptop typing problem (keyboard layout) - Smart planet